காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்களுக்கு ஆஸ்திரேலியா விசா மறுப்பது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த அணுகுமுறை அதிர்ச்சியளிக்கின்றது எனவும் சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவில் இருந்து பலர் இடம்பெயர்ந்துள்ளனர், இந்நிலையில் அவர்களுக்கு போதுமான மனிதாபிமான பாதுகாப்பை வழங்குவதற்கு ஆஸ்திரேலியா தவறியுள்ளது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா 11 ஆயிரம் உக்ரேனியர்களுக்கும், 6 ஆயிரம் ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கும் தற்காலிக விசா வழங்கியுள்ள நிலையில், பாலஸ்தீனர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றது எனவும் அறிக்கைமூலம் சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.