Northern Territory பூர்வக்குடி சிறார் விவகாரம் தொடர்பில் புதிய தேசிய ஆணைக்குழுவொன்று நிறுவப்படவுள்ளது.
சிறார் பராமரிப்பு நிலையம் மற்றும் சிறார் தடுப்பு மையம் என்பவற்றில் பூர்வக்குடி சிறார்கள் நடத்தப்படும் விதம் பற்றி இந்த ஆணைக்குழு கண்காணிக்கவுள்ளது.
குறித்த ஆணைக்குழு ஜனவரி முதல் செயற்பட ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்வக்குடி சிறார்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இக்குழுவின் தலைமைப்பதவிக்கு பூர்வக்குடி நபரொருவர் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
ஆஸ்திரேலியாவில் சிறார் பராமரிப்பு மற்றும் இளைஞர் தடுப்பு மையங்களில் உள்ள பூர்வக்குடி சிறார்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.