கடந்த ஆண்டின் இறுதியில் சீன கடற்படை போர்க்கப்பல்கள் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு மிக அருகில், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் நுழைந்ததை ADF பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் இந்த நடமாட்டம் கண்டறியப்பட்டதால் அந்நாட்டின் கடலோர பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
இந்த கப்பல்களின் நகர்வுகளை வான்வழி கண்காணிப்பு மூலம் ஆஸ்திரேலியா உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில், அவை எவ்வித நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ராணுவம் தனது எல்லைகளைத் தாண்டி தொலைதூரக் கடல்களில் செயல்படும் திறனை நவீனமயமாக்கி வருவதை இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
இது பிராந்திய நாடுகளுக்குத் தனது இராணுவ வலிமையைக் காட்டும் ஒரு சைகையாகவும், உள்நாட்டுப் பயிற்சிக்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புத் தளபதி ஜான்ஸ்டன் கருதுகிறார்.
இந்தப் பயணம் சீன கடற்படையின் அதிகரித்து வரும் விரிவாக்கத்தையும் வலிமையையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.