லிபரல் கட்சியின் புதிய தலைவராக ஆங்கஸ் டெய்லர் Angus Taylor தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தலைமைத்துவத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்த சூசன் லே Sussan Ley அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
லிபரல் கட்சி தலைவராக இருந்த பீட்டர் டட்டன் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனது தொகுதியில் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து லிபரல் கட்சியின் தலைவராக துணைத்தலைவராக இருந்த சூசன் லே தெரிவுசெய்யப்பட்டார்.
லிபரல் கட்சி வரலாற்றில் தலைமைப் பதவிக்கு பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்ட முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது.
எனினும், எதிரணி கூட்டணி பிளவுபட்டதால் சூசன் லேயின் தலைமைப்பதவி தொடர்பில் கடும் சவால் எழுந்தது.
இந்நிலையிலேயே புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக லிபரல் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஆங்கஸ் டெய்லர் வெற்றிபெற்றுள்ளார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் அறிவிப்பை சூசன் லே வெளியிட்டார்.
"நான் எனது ராஜினாமாவை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட, பொது வாழ்க்கையிலிருந்து முழுமையாகவும் முழுமையாகவும் விலகிச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று அவர் கூறினார்.
இதனால் சூசன் லே பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
லிபரல் கட்சியின் புதிய தலைவர் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்படுவார்.