பாலஸ்தீன ஆதரவு பிரச்சார அமைப்பான “Palestine Action” மீது ‘பயங்கரவாதக் குழு’ என தடை விதித்த பிரிட்டன் அரசின் முடிவு சட்டவிரோதமானது என அந்நாட்டு உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ், கடந்த ஜூன் மாதம் அந்த அமைப்பை தடை செய்வதாக அரசு அறிவித்திருந்தது.
இதன் மூலம், அந்த அமைப்பு அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் (ISIS) போன்ற ஆயுதக் குழுக்களுடன் ஒரே வரிசையில் சேர்க்கப்பட்டது. மேலும், அந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஈடுபடுவது இங்கிலாந்தில் குற்றவியல் குற்றமாகக் கருதப்படும் நிலையும் உருவாக்கப்பட்டது.
இந்தத் தடை அறிவிப்பு வெளியானதுடன், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அரசின் முடிவை எதிர்த்து சட்டப்போராட்டங்களும் தொடுக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தத் தடை சட்டபூர்வமானதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, அரசின் நடவடிக்கைக்கு பெரிய பின்னடைவாகவும், பாலஸ்தீன ஆதரவு இயக்கங்களுக்கு முக்கிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம், பாலஸ்தீனம் தொடர்பான அரசியல் மற்றும் மனித உரிமை விவாதங்களை ஐக்கிய இராச்சியம் உட்பட உலகளவில் மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.