இஸ்ரேலிய ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை காவல்துறை அப்புறப்படுத்திய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செயலுக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தனது கவலையைத் தெரிவித்துள்ளதோடு, காவல்துறை இதற்குத் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையர் இதற்குத் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டாலும், NSW Premier காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து ஆதரித்தே பேசுகிறார்.
இதற்கிடையில், இந்த மோதல் குறித்து முறையான விசாரணையை அந்நாட்டின் காவல்துறை கண்காணிப்பு ஆணையம் தற்போது தொடங்கியுள்ளது.
ஜனநாயக ரீதியில் போராட உரிமை இருந்தாலும், காவல்துறையின் ஆலோசனைகளை ஏற்பாட்டாளர்கள் மதிக்காதது வருத்தமளிப்பதாகப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.