மெல்பேர்னிலுள்ள இரு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 45 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த நபரின் பையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி அருகிலுள்ள பாடசாலைகள் உடனடியாக முடக்கப்பட்டன.
அவர்மீது வெடிகுண்டு புரளி, அத்துமீறல் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் எந்தவொரு மத அல்லது கருத்தியல் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர், வரும் செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். துரிதமான நடவடிக்கையால் மாணவர்கள் எவ்வித பாதிப்புமின்றி உரிய நேரத்தில் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.