பிரிஸ்பேனில் உள்ள இராணுவ முகாமில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
முகாமில் இருந்த நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக 31 வயதுப் பெண் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
காயமடைந்த 48 வயது மதிக்கத்தக்க நபர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த மோதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போதைக்கு அந்த இராணுவத் தளம் ஒரு குற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.