உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனுக்கான தனது முழுமையான ஆதரவை ஆஸ்திரேலியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் தற்காப்பு மற்றும் எரிசக்தித் தேவைகளுக்காகச் சுமார் 1.7 பில்லியன் டாலர் நிதியுதவியை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில், அதன் நிதி, பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளை இலக்காகக் கொண்டு 180 புதிய தடைகளை ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் வருவாயைக் குறைப்பதற்காக கச்சா எண்ணெய் விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, கிரிப்டோகரன்சி அமைப்புகள் மீதும் முதன்முறையாகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
சர்வதேச சட்டங்களை மதிக்கவும், உக்ரைனின் சுயாதிபத்தியத்தை அங்கீகரிக்கவும் ரஷ்யாவிற்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.
நீடித்த அமைதியை நிலைநாட்டப் பன்னாட்டுத் துணையுடன் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக ஆஸ்திரேலியா உறுதியளித்துள்ளது.