ஆஸ்திரேலியாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சூசன் லே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று (27) முறைப்படி விலகியுள்ளார்.
சமீபத்தில் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பை இழந்ததைத் தொடர்ந்து, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர், பிரியாவிடை உரை நிகழ்த்தப் போவதில்லை என்று கூறி தனது நீண்டகால அரசியல் சேவையில் பெருமிதம் கொண்டுள்ளார்.
லிபரல் கட்சியை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இவரது வெளியேற்றத்தைத் தொடர்ந்து, ஃபாரர் தொகுதியில் விரைவில் ஒரு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வரும் காலங்களில் பல பெண்கள் அரசியலில் உயரிய இடங்களைப் பிடிக்கத் தாம் ஒரு முன்னோடியாக இருந்திருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.