லெபனான்மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், லெபனானில் இருந்து இன்று 500 ஆஸ்திரேலியர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து இரு விமானங்களில் இவர்கள் சைபிரஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்படுவார்கள்.
லெபனானில் 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வாழ்கின்றனர் என அரச தகவல்கள் கூறினாலும், அந்த எண்ணிக்கை 30 ஆயிரமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா திரும்புவதற்கு 2 ஆயிரத்து 338 பேர் மாத்திரமே விண்ணப்பித்துள்ளனர்.
அதேவேளை, லெபனான் செல்ல வேண்டாம் என 2023 ஆம் ஆண்டு முதல் வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கை விடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லெபனானில் இருந்து நேற்று முன்தினம் 41 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பி இருந்தனர்.