ஈரான்மீதான கூட்டு தாக்குதல் சட்டவிரோதமானது அல்ல என்று ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேல் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி கூட்டு தாக்குதலை சட்டவிரோதம் என விமர்சித்த ஐ.நா.மீதும் அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஈரான் மீதான வான்வழி தாக்குதல் கட்டாயம் நடத்தப்படவேண்டியதொன்று எனவும் தூதுவர் எடுத்துரைத்துள்ளார்.
ஏனெனில் ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதக் குழுக்களின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது.
ஈரானில் பாடசாலைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், அது இராணுவ மையமாக செயல்பட்டுவந்துள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.