தெற்கு ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் முன்னாள் தலைவர் David Speirs, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து அடுத்தவாரம் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தனது வீட்டில் அவர் சட்டவிரோத போதைப்பொருள் பாவிப்பது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள பின்னணியிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெள்ளை நிற பவுடரொன்றை அவர் நுகர்வதுபோல் காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன. அது சட்டவிரோத போதைப்பொருளாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.
ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது. அன்றைய தினமே அவர் எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.அத்துடன், அவர் லிபரல் கட்சியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தனது வீடு பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு தான் கைது செய்யப்பட்டார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் David Speirs ஒப்புக்கொண்டுள்ளார்.