ஈரான் தொடுக்கும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களிலிருந்து பாரசீக வளைகுடா நாடுகளைப் பாதுகாப்பதற்காக, ஆஸ்திரேலியா தனது இராணுவ உதவியை வழங்க முன்வந்துள்ளது.
இதற்கமைய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், வான்வெளி கண்காணிப்புப் பணிகளுக்காக E-7A வெட்ஜெடைல் விமானத்தையும் 85 இராணுவ வீரர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பியுள்ளார்.
இப்பிராந்தியத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று அரசாங்கம் தெரிவிக்கிறது.
எனினும், இந்த முடிவிற்கு ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிகளிடமிருந்து கலவையான விமர்சனங்களும், கிரீன்ஸ் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
ஆஸ்திரேலியா தேவையற்ற முறையில் ஒரு போரில் ஈடுபடுவதாகவும், அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.