ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் முடிவைக் கைவிட்ட ஈரான் தேசிய மகளிர் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
இவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
எனினும், அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சம் இன்னும் நிலவுகிறது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அணியின் இருவர் மட்டும் ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிட முடிவெடுத்துள்ள நிலையில், மற்றவர்கள் கடுமையான அரசு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடு திரும்பியுள்ளனர்.
தமது நாட்டு வீராங்கனைகளை ஆஸ்திரேலியா பிணைக் கைதிகளாக வைத்துள்ளது என ஈரான் குற்றஞ்சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலியா நிராகரித்திருந்தது.