ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் ஆளுநர் Michele Bullock, நாட்டில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்ட அதே நாளில் 2 மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு விடுமுறை இல்லத்தை வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த நான்கு படுக்கையறை கொண்ட சொகுசு வீடு, ஏற்கனவே பல முதலீட்டுச் சொத்துக்களைக் கொண்டுள்ள அவரது சொத்துப்பட்டியலில் இணைந்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மேற்கொண்ட வட்டி விகித உயர்வால் பொதுமக்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில் இந்த தகவலை வெளியாகியுள்ளமையின் நோக்கம் பற்றி பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான ஊதியம் பெறும் புல்லக்கின் இந்த முதலீடு, அவரது அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் நிலையில், உயர்மட்ட அதிகாரியின் இந்த விலையுயர்ந்த கொள்முதல் சமூக ரீதியான விவாதங்களை உருவாக்கியுள்ளது.