சிட்னி தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு மாணவரொருவர் பலியாகியுள்ளார்.
தனது நண்பரின் கார் மோதியதிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் ஒரு காரில்தான் வந்துள்ளனர், நண்பரை இறக்கிவிட்டு காரை எடுக்க முற்பட்டவேளையிலேயே அது தவறுதலாக நண்பன்மீது மோதியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த Ismail Hossain என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காரை செலுத்தியவர் கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.