ஈரானிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு கோரவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான நடவடிக்கை இதுவெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பில் ஈரான் கடும் அதிருப்தியில் உள்ளது. தமது நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய தூதுவருக்கும் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்நிலையிலேயே தாம் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஈரானிடம் மன்னிப்பு கோரவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.