மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எமது எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று அவர் திட்டவட்டமாக
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தனது எக்ஸ்தள பக்கத்தில் அவர் விசேட பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தாது என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்களை குறிவைத்தால், அதற்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மத்திய கிழக்கு போர் இன்று 31 ஆவது நாளாக தொடர்கின்றது.