விக்டோரிய மாநில லிபரல் கட்சி தலைவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்குரிய நகர்வுகளை அக்கட்சியின் எம்.பிக்கள் குழுவொன்று முன்னெடுத்துவருகின்றது என தெரியவருகின்றது.
விக்டோரிய மாநில லிபரல் கட்சி தலைவர் John Pesutto இற்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், 2026 தேர்தலில் தான் போட்டியிடுவார் என அவர் தொடர்ச்சியாக அறிவித்துவருகின்றார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இவ்வருடத்துக்குள் அவரை கட்சியின் மாநில தலைமைப்பதவியில் இருந்து நீக்குவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
தலைமைத்துவத்துக்கு எதிரான பிரேரணையை நாடாளுமன்றத்தில் நாடாளுமன்றத்தில் 16 எம்.பிக்களின் ஆதரவு தேவை.
அடுத்த வாரம் நாடாளுமன்றம்கூடும்போது தலைமைப்பதவிக்கு சவால் விடுக்கப்படும் எனவும், தேவையான பெரும்பான்மை தமது அணி வசம் உள்ளது எனவும் லிபரல் கட்சி எம்.பியொருவர் குறிப்பிட்டுள்ளார்.