ஆஸ்திரேலிய அரசாங்கம் பெட்ரோல் மீதான வரியை அடுத்த மூன்று மாதங்களுக்குப் பாதியாகக் குறைத்துள்ளது.
மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி, குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிச் சலுகை அடுத்த மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதால், வாகன சாரதிகள் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்கு பெரிய அளவிலான நிதி நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சரக்குக் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும் உருவாக்கப்பட்ட புதிய தேசிய பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்படும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைச் சீராக வைத்திருக்கவும் இந்தத் திட்டம் உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எரிபொருளைச் சேமிக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அடுத்தகட்ட நெருக்கடிகளைச் சமாளிக்கத் தேவையான தயார்நிலைத் திட்டங்களையும் வகுத்துள்ளது.