ஆஸ்திரேலியாவின் Geelong நகரில் உள்ள ஒரு சமூக வீட்டு வசதி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
அதிகாலை வேளையில் பரவிய இந்தத் தீயால் பல வீடுகள் சேதமடைந்ததோடு, அங்கிருந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 35 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து தொலைபேசி உள்ளிட்ட சில பொருட்களைக் கைப்பற்றிய காவல்துறையினர்,
இது ஒரு திட்டமிட்ட தீவைப்புச் சம்பவமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பெண் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், வீடுகளை இழந்த மக்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.