ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாப்பது குறித்து 35 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் கூட்டத்தில் ஆஸ்திரேலியா இணையவுள்ளது.
பிரித்தானியா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் Penny Wong பங்கேற்கின்றார்.
பிராந்திய பாதுகாப்பிற்கு பங்களிக்க ஆஸ்திரேலியா ஆர்வமாக இருந்தாலும், அதன் கடற்படைத் திறன்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக போர்க்கப்பல்களை அனுப்புவதில் சவால்கள் நிலவுகின்றன.
எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விரைவில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
ஈரான் உடனான போர்ச் சூழலில் ஒரு போர்நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலியா தனது அடுத்தகட்ட இராணுவ பங்களிப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.