ஈராக் நகரில், ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அந்நாட்டிலுள்ள தமது பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியா பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நலன்களுடன் தொடர்புடைய இடங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் அண்மையில் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈராக்கிற்கு பயணம் செய்ய வேண்டாம் என ஆஸ்திரேலியா ஏற்கனவே பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈராக் மத்திய பக்தாத்தில் அடுத்த 48 மணிநேரத்துக்குள் தாக்குதல் நடத்தப்படக்கூடும் உளவுத்தகவல்கள் வெளியாகியுள்ளன.