மெல்பேர்னின் ட்ருகானினா பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் இலவச பெட்ரோல் வழங்கும் விளம்பர நிகழ்வு கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆர்எஸ் ரிவார்ட்ஸ் (RS Rewards) அமைப்பின் சார்பில் Billy Beasley என்பவர் ஒரு லட்சத்து டாலர் மதிப்பிலான எரிபொருளை வழங்கத் திட்டமிட்டதால், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வாகனங்கள் அப்பகுதியில் திரண்டன.
நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி காவல்துறையினர் தலையிட்டு இந்த நிகழ்வை பாதியிலேயே நிறுத்தினர்.
எரிபொருள் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த கூட்டத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அமைப்பாளர்கள் இலவச எரிபொருள் வவுச்சர்களை வழங்கினர்.
இவ்வளவு பெரிய அளவில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த பீஸ்லி, எதிர்காலத்தில் இதுபோன்ற மற்றுமொரு நிகழ்வை நடத்த விரும்புவதாகக் கூறினார்.