புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னதாக செனட் சபையிலிருந்து விலகுமாறு லேபர் கட்சி தலைவரான பிரதமர் அந்தோனி அல்பானீஸ் விடுத்த கோரிக்கையை, சுயாதீன செனட்டர் Fatima Payman நிராகரித்துள்ளார்.
பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் லேபர் அரசு, இஸ்ரேல் சார்பு போக்கை கடைபிடித்துவந்ததால் அதற்கு செனட்டர் Fatima Payman கடும் எதிர்ப்பை வெளியிட்டார். அத்துடன், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கிறீன்ஸ் கட்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தையும் அவர் ஆதரித்திருந்தார்.
இதனையடுத்து லேபர் கட்சியில் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த செனட்டர் Fatima Payman, லேபர் கட்சியில் இருந்து விலகினார்.
செனட் சபையில் சுயாதீனமாக செயற்பட்டுவந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் அறிவிப்பை அண்மையில் விடுத்தார்.
இந்நிலையிலேயே செனட்டர் பதவியை துறக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், அதனை செனட்டர் Fatima Paymanநிராகரித்துள்ளார்.
கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் அல்ல நாடு முழுவதும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
செனட்டராக பதவி வகிப்பதால் அவரால் இலகுவில் கட்சியொன்றை பதிவுசெய்துகொள்ள முடியும் என தெரியவருகின்றது.