ஈரான் சிவிலியன் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் கண்டிக்க வேண்டும் என Greens கட்சி வலியுறுத்தியுள்ளது.
Greens கட்சியின் செயல் தலைவர் Mehreen Faruqi , ஆஸ்திரேலியா தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவுடனான தற்காப்பு உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்கள் மீதான இத்தகைய திட்டமிடப்பட்ட தாக்குதல்களை அமைதியாக வேடிக்கை பார்ப்பது போர்க்குற்றங்களை அங்கீகரிப்பதற்குச் சமம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மக்கள் போரை எதிர்ப்பதால், பிரதமர் அல்பானிஸ் இந்த விவகாரத்தில் மௌனம் காக்காமல் உடனடியாகச் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.