ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese இரு நாள் பயணமாக நாளை மறுதினம் (9) சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
சிங்கப்பூர் பிரதமர் உட்பட அந்நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடன் அவர் பேச்சு நடத்துவார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான மூலோபாய உறவை மேம்படுத்துவது குறித்தும் தடையற்ற எரிபொருள் வர்த்தகத்தை உறுதி செய்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே பிரதமர் சிங்கப்பூர் செல்கின்றார்.