ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் இருந்து விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்ஸில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஈரானால் முன்மொழியப்பட்டுள்ள 10 அம்ச திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவுடன் நேரடி பேச்சு எதிர்வரும் 10 ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுதல் மற்றும் ஈரான் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்குதல் போன்ற முக்கிய கோரிக்கைகள் ஈரான் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈரானின் கோரிக்கைகள்
ஈரானிய ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்தை ஏற்படுத்துதல்.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து தளங்கள் மற்றும் நிலைநிறுத்தப்பட்ட இடங்களிலிருந்தும் அமெரிக்கப் போர்ப் படைகளைத் திரும்பப் பெறுதல்.
ஒப்புக்கொள்ளப்பட்ட நெறிமுறையின்படி ஈரானின் மேலாதிக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணை ஒரு பாதுகாப்பான போக்குவரத்து நெறிமுறையை நிறுவுதல்.
மதிப்பீடுகளின்படி ஈரானில் ஏற்பட்ட சேதங்களுக்குரிய இழப்பீட்டை செலுத்துதல்.
பாதுகாப்பு சபையின் அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகள் மற்றும் தீர்மானங்களை நீக்குதல்,"
வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள அனைத்து ஈரானிய சொத்துக்களையும் உடைமைகளையும் விடுவித்தல்.
இந்த அனைத்து விடயங்களையும் ஒரு கட்டுப்படுத்தும் பாதுகாப்பு சபைத் தீர்மானத்தில் உறுதிப்படுத்துதல்.