குயின்ஸ்லாந்து மாநில சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான ஜிம்மி சல்லிவன் Jimmy Sullivan , பிரிஸ்பேனில் உள்ள அவரது இல்லத்தில் தற்செயலாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறை, இது தொடர்பான அறிக்கையை மரண விசாரணை அதிகாரிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
கடந்த காலங்களில் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் குடும்பத் துயரங்களால் பாதிக்கப்பட்டிருந்த சல்லிவன், கடந்த ஆண்டு மே மாதம் ஆளும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு சுயேச்சை உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார்.
தனது முதல் குழந்தை இறந்த சோகத்தாலும், இரண்டாவது குழந்தையின் பிறப்புடன் தொடர்புடைய மன உளைச்சலாலும் தான் அவதிப்பட்டு வந்ததாக அவர் முன்னரே நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார்.