சிட்னியில் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்தபோது தப்பியோடிய பாலியல் குற்றவாளி மைக்கேல் அங்கோக் ஐந்து நாட்களுக்குப் பிறகு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான இவர் வில்லாவூட் தடுப்பு மையத்திலிருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டபோது அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை செவன் ஹில்ஸ் பகுதியில் வைத்து நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
தற்போது அவர் பிளாக் டவுன் பொலிஸ் அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடம் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.