ஆஸ்திரேலிய அரசு, இஸ்ரேலுக்கு வழங்கிய ஆயுத ஏற்றுமதி உரிமங்கள் தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்தக் கோரி பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று பாலஸ்தீன மனித உரிமை அமைப்புகளாலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதிகள் மற்றும் மறைமுக ஏற்றுமதிகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிய இந்த அமைப்புகள் முயல்கின்றன.
ஏற்றுமதி செய்யப்படும் தொழில்நுட்பங்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீற பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வதே இந்த சட்ட நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
ஆஸ்திரேலியாவின் இந்த வர்த்தக நடவடிக்கைகள் அதன் சர்வதேச கடப்பாடுகளுக்கு உட்பட்டதா என்பதை சட்ட ரீதியாக அறிவதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும்.