ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான சர்வதேச இராஜதந்திர முயற்சிகளில் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பில் சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாரம் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் 40 நாடுகள்வரை பங்கேற்கவுள்ளன.
ஆஸ்திரேலியா தற்போது தற்காலிக போர்நிறுத்தத்தை ஆதரிக்கின்றது. நிரந்தர போர் நிறுத்தத்தையும் கோரியுள்ளது.