மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எரிசக்தி விநியோகத் தடையால் பொருளாதார வளர்ச்சி சரிந்து, விலைவாசி உயர்வு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியப் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ், வரவிருக்கும் இந்த சவாலான காலக்கட்டத்தை எதிர்கொள்ளத் தமது நாடு தயாராக இருந்தாலும், அதன் தாக்கம் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, மற்ற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.
சர்வதேச நிதிக் கூட்டங்களில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் சால்மர்ஸ், வரவிருக்கும் பட்ஜெட்டில் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.