ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டுள்ளமை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி வரவேற்றுள்ளார்.
“தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் கட்டணங்கள் இல்லாத சூழலை நாங்கள் விரும்புகிறோம். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிட்னியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
“ ஆசியாவிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் வர்த்தகப் பொருட்களில் பெரும்பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றது. எனவே, அங்கு ஏற்படும் பாதிப்புகள் ஆசியாவிற்கு அதிக அழுத்தத்தை அளிக்கின்றன.”எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேற்காசிய மோதலை தீர்க்க ஒருங்கிணைந்த சர்வதேச இராஜதந்திர முயற்சியை ஆஸ்திரேலியா ஆதரிப்பதாகவும், அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள இராணுவத் திட்டமிடுபவர்கள் கூட்டத்தில் பங்கேற்று, கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான சர்வதேச பணியில் ஆஸ்திரேலியா பங்களிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.