ஆஸ்திரேலியாவுக்குள் 200 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடத்த முற்பட்ட நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்களுடன் தொடர்புடைய சர்வதேச கடத்தல் குழுவொன்று, நடுக்கடலில் வைத்து இந்தப் போதைப்பொருட்களைப் பரிமாற்றம் செய்ததாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
கைது செய்யப்பட்ட நபர் பயன்படுத்திய படகிலிருந்து பெரும் அளவிலான போதைப்பொருட்களுடன் 1,00,000 டாலர் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோதச் செயலுக்காக அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடலோரப் பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறப்புப் படைப் பிரிவினர் இந்தப் பெரும் போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.