மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்காவில் சமீபகாலமாக டிங்கோ Dingo நாய்கள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த சில நாட்களில் ஒரு தாய் மற்றும் மூன்று சிறுவர்கள் இந்த விலங்குகளால் காயமடைந்ததை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக டேல்ஸ் முகாம் பகுதியில் தங்கியிருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்குமாறும், விலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் இந்த நாய்கள் அதிக ஆக்ரோஷத்துடன் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூங்கா ஊழியர்கள் இந்த அபாயகரமான விலங்குகளைக் கண்டறிந்து அவற்றை அழிக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அப்பகுதியில் தொடர் ரோந்துப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது.