ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் Alice Springs பகுதியில் பூர்வக்குடி முகாமில் இருந்து ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று Northern Territory காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
நேற்றிரவு முதல் காணாமல் போன அந்தச் சிறுமியைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஷரோன் கிரானைட்ஸ் என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் ஜெபர்சன் லூயிஸ் என்பவரைத் தேடி வரும் அதிகாரிகள், அவர் ஒரு முன்னாள் கைதியென தெரிவித்துள்ளனர்.
வான்வழி ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தன் குடும்பத்துடன் இருக்க வேண்டிய பிஞ்சுச் சிறுமியைப் பத்திரமாக மீட்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.