ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக டேவ் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
2024-ஆம் ஆண்டின் இறுதியில் தூதுவர் பதவியில் இருந்து கரோலின் கென்னடி விலகிய பிறகு, நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த இடத்திற்கு தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய நியமனம் முறையாக உறுதி செய்யப்படுவதற்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.