ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் கடத்தப்பட்ட சிறுமியை தேடும் பணி இன்று 4 ஆவது நாளாக தொடர்கின்றது.
சிறையிலிருந்து விடுதலையான ஜெபர்சன் லூயிஸ் என்பவராலேயே அச்சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதில் இருந்து தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது.
தற்போது நான்காவது நாளை எட்டியுள்ள இந்தத் தீவிரத் தேடுதல் வேட்டையில், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் குதிரைப்படை வீரர்களுடன் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் இணைந்துள்ளனர்.
அந்தச் சிறுமி இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் அதிகாரிகள், அப்பகுதியின் கரடுமுரடான நிலப்பரப்பில் தேடுதலை விரிவுபடுத்தியுள்ளனர்.
காணாமல் போன சிறுமியைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.