Adelaide வடக்கு பகுதியில் உள்ள Parafield விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
சிறிய ரகவிமானம் அங்கிருந்த ஹேங்கர் கட்டடத்தின் மீது மோதியதில் விமானியும் பயணியும் உயிரிழந்தனர்.
இந்த மோதலால் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில், தரையிலிருந்த பலருக்குக் காயங்கள் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்திய நிலையில், அங்கிருந்த சிலவிமானங்கள் சேதமடைந்தன.
ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தற்போது இந்த விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.