மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியில் பெண்ணொருவரை கடித்துக் குதறிய மூன்று நாய்கள், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.
வீடொன்றின் பின்புறத்தில் மூன்று நாய்கள், பெண்ணொருவரை கடித்து குதறும் காட்சியை பொலிஸார் கண்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து , நாய்கள்மீது பொலிஸார் capsicum ஸ்ப்ரேயைப் பயன்படுத்தினர். எனினும், நாய்கள் அப்பெண்ணை விடவில்லை.
இதனையடுத்து பொலிஸார் நாய்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவற்றை கொன்றனர்.
படுகாயமடைந்துள்ள பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.