ஆஸ்திரேலியா, ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 5 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, அமைதி பேணுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியை கடத்தி கொலை செய்த சந்தேக நபர் பிடிபட்டபோது அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் வைத்தியசாலைக்கு வெளியே நடந்த போராட்டங்கள் குறித்து காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அமைதியைக் கடைப்பிடிக்குமாறு சிறுமியின் குடும்ப உறுப்பினர்களும் சமூகப் பெரியவர்களும் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சட்டத்தைத் தன் கையில் எடுக்காமல், குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தர நீதிமன்ற நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்போது நிலவும் பதற்றமான சூழலைக் குறைத்து, உயிரிழந்த சிறுமிக்காக துக்கம் அனுசரிக்கவும் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கவும் மூத்த தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.