ஆஸ்திரேலியா பெரடர் அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
உலகளாவிய மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியிலேயே பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் (Jim Chalmers) பாதீட்டை முன்வைக்கவுள்ளார்.
ஈரான் போர் காரணமாக நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் Jim Chalmers கவலை தெரிவித்துள்ளார்.
நிலவும் வீட்டுவசதி நெருக்கடியைக் கையாளும் நோக்கில், முதலீட்டாளர்களுக்கு சாதகமாக உள்ள மூலதன ஆதாய வரிச் சலுகைகள் மற்றும் நெகட்டிவ் கியரிங் முறையில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்த மாற்றங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் நிலவும் தலைமுறை இடைவெளி சமமின்மையைக் குறைத்து, இளைஞர்களுக்கும் முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கும் உதவ அரசு திட்டமிட்டுள்ளது.
சர்வதேச மோதல்கள் மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில், நாட்டின் வரி முறையை மிகவும் நீதிமிக்கதாகவும் எளிமையாகவும் மாற்றுவதே இந்த வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நீண்ட காலத்திற்குப் பிறகு இத்தகைய கடுமையான வரி மாற்றங்கள் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.