லெபனான்மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை ஆயிரத்து 117 ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்துக்குள் மாத்திரம் சுமார் 700 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து சைபிரஸ் சென்று, அங்கிருந்து மூன்று விமானங்களில் ஆஸ்திரேலியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
லெபனானில் 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வாழ்கின்றனர் என அரச புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும் அங்கு 30 ஆயிரம் பேர்வரை இருக்கக்கூடும் என மதிப்பிடப்படுகின்றது.