ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese மற்றும் ஜப்பானியப் பிரதமர் Sanae Takaichi
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சீனாவுக்கு மாற்றாக கனிம விநியோகச் சங்கிலியை பலப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக டகாயிச்சி பதவியேற்ற பிறகு மேற்கொண்ட இந்த முதல் பயணம், இரு நாடுகளையும் " கூட்டாளிகளாக" (quasi-allies) மாற்றியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையிலான ஐம்பது கால நட்புறவின் வலிமையை உலகிற்கு பறைசாற்றுகிறது.