5 வயது பூர்வக்குடி சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து , Northern Territory ஆஸ்திரேலிய அரசாங்கம் சிறார் பாதுகாப்பு முறையை முழுமையாக மறுஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில், மூன்று ஊழியர்கள் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சிறார் பாதுகாப்பு அமைப்பில் உள்ள சட்டங்கள், கலாச்சாரம் மற்றும் வளங்கள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
இதற்கிடையில், மறைந்த சிறுமியின் குடும்பத்தினர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்தத் துயரமான சம்பவத்தைப் அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வன்முறையைத் தவிர்த்து, சிறுமியின் நினைவை அமைதியான முறையில் கௌரவிக்குமாறு அவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.