சிரியா அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'ஐஎஸ் மணப்பெண்கள்' (ISIS Brides) மற்றும் அவர்களது குழந்தைகளை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர உதவிய நபர் ஒருவர், சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டார்.
சிரியாவிலிருந்து ஆஸ்திரேலியப் பெண்களைத் தாயகம் கொண்டு வர உதவும் நோக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த நபர் சிரியா சென்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அவர் 'ஐஎஸ் மணப்பெண்' என்று குறிப்பிடப்படும் Janai Safar என்பவருடன் ஒரே விமானத்தில் சிட்னி திரும்பியபோது காவல்துறையினரால் பிடிபட்டார்.
எனினும், இவரது கைதுக்கும் சிரியா பயணத்திற்கும் அல்லது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது முன்னரே நிலுவையில் இருந்த ஒரு தாக்குதல் (Assault) வழக்குத் தொடர்பாகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவருடன் பயணித்த 32 வயதான ஜனாய் சஃபார், விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது சில்வர்வாட்டர் (Silverwater) பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிரியாவில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.