ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக லாவோஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதர், சீன பிரதமருடன் இரு தரப்பு பேச்சில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இறால் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் பற்றி ஆராயப்பட்டுள்ளது. விரைவில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வைன் ஏற்றுமதிமீதான தடை தளர்த்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நன்மை பற்றி சீன பிரதமரிடம், ஆஸ்திரேலிய பிரதமர் எடுத்துரைத்துள்ளார். அத்துடன், தென்சீனக் கடல் பகுதியில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் சீனா ஈடுபடக்கூடாது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.