Farrer தொகுதி இடைத்தேர்தலில் லிபரல் கட்சி அடைந்த தோல்வி மற்றும் ஒன் நேஷன் கட்சியின் வெற்றி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
லிபரல் கட்சியினர் தங்களது கொள்கைகளில் தெளிவின்றி செயல்படுவதால் வாக்காளர்கள் உண்மையான வலதுசாரி கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன் நேஷன் கட்சியின் செல்வாக்கு நாடு முழுவதும் பரவாது என்று கருதும் அவர், அக்கட்சி தீர்வுகளை விட குறைகளை மட்டுமே முன்னிறுத்துவதாக கூறியுள்ளார்.
லிபரல் கட்சியின் தலைவராக பதவி வகித்த சூசன் லே தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.
இதனால் சூசன் லேயின் தொகுதியான இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலில் பிரதான இரு தேசியக் கட்சிகளும் தோல்வி அடைந்தன.
இத்தகைய சூழலில், மாற்று அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளின் வளர்ச்சி குறித்து பிரதமர் தனது ஆச்சரியமின்மையை வெளிப்படுத்தியுள்ளார்.